Welcome to Makkal TV

சின்னத்திரை செய்திகள் வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமையாக வருகிறான் ஒற்றன்.

நடுநிலையான செய்திகளை வழங்குவதில் தனக்கென்று தனி இடம் பிடித்த மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளுக்கு இடையில் நாள்தோறும் தோன்றுகின்றான் இந்த ஒற்றன்.

அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு, கட்சிப் பிரபலங்களின் உள்குத்து வேலைகள், முக்கிய பிரபலங்களின் சதித்திட்டங்கள், நட்சத்திரங்களின் திரைமறைவு நிகழ்வுகள், அரசு அதிகாரிகளின் உள்ளடி நடவடிக்கைகள் என மறைக்கப்படும் உண்மைகளை மக்கள் முன்பு போட்டு உடைத்து வருகிறான் ஒற்றன்.

செய்திகளில் இது புதுமை மட்டுமல்ல, பலரையும் ஆட்டிப் படைத்துவரும் அதிரடியும் கூட.

மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 8 மணி மற்றும் 10 மணி செய்திகளில் ஒற்றன் பகுதி ஒளிபரப்பாகி வருகிறது. அதிர்ச்சி, வியப்பு என கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் நேயர்களுக்கு தந்து கொண்டிருக்கிறான் மக்கள் தொலைக்காட்சியின் ஒற்றன்.