Welcome to Makkal TV

உலகத்தமிழர் செய்திகள்

உலகத்தமிழர்களை ஒன்றிணைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் சுக துக்கங்களையும் சேவைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான களமாக உலகத்தமிழர் செய்தி அமைந்துள்ளது. நாள்தோறும் இரவு 8 மணி மற்றும் 10 மணி செய்திகளில் ஒளிபரப்பாகும் இந்த சிறப்புப் பகுதி பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உலகத்தமிழர் செய்திக்கு அமெரிக்கா, ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து செய்திகள் ஏராளமாய் வந்து குவிவதே நல்ல சான்று.