அண்மைச்செய்திகள்
1.நீதிமன்ற வளாகங்களில் கண்காணிப்பு கருவி பொருத்துவதற்காக விரைவில் நிதி ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
2.விழுப்புரத்தில் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகி கள் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
3.தியாகிகள் குடும்பத்தினரிடம் இருந்து வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை மனுவை பெற முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாக அன்புமணி புகார்.
4.காரைக்கால் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை துப்பாக்கிச்சூடு- இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது இந்தியா.
5.ஆளுநர் ரவி செய்கிற இடர்பாடுகளால்தான் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு.
6.மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தால் தமிழ்நாடு சீரழிந்துகொண்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் வேதனை.
7.ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப் 15 ஏவுர்தி - பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
8.பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்.
9.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் சென்னையில் அல் பாசி என்பவரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை.
10.பழங்குடியினத்தை சேர்ந்தவர் அளித்த புகாரில் இன்போசிஸ் நிறுவன துணை தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.