Welcome to Makkal TV

அண்மைச்செய்திகள்

1.போர்நிறுத்தத்தை மீறி பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக காசா பகுதி மக்கள் குற்றச்சாட்டு.

2.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிப்பு.

3.தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதி களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

4.காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட நாளை நடுவண் அரசு அதிகாரிகள் தமிழகம் வருகை.

5.திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் கல்லூரியில் இருந்து 13 கோடியே 70 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்.

6.மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது.

7.திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் வெங்காயம், பூண்டு இல்லாத மசால் வடைகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு.

8.திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

9.தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரித்த தில் ராஜூவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு.

10.உலக நலவாழ்வு அமைப்பில் இருந்து வெளியேறியது அமெரிக்கா - புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் சர்ச்சை முடிவு.