அண்மைச்செய்திகள்
1.ராமேஸ்வரத்தில் வரும் 6ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு.
2.மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வரைவு மீது ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசார விவாதம்.
3.நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைப்படி ஓபிசி கிரீமிலேயர் வரம்பை 16 லட்சம் ரூபாயாக அதிகரிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
4.மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் திட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்.
5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் தொடக்கம் - பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
6.கடலூர் புதுச்சத்திரம் அருகே சரக்குந்துகளை வழிமறித்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட விஜய் என்ற போக்கில் காவல்துறையால் சுட்டுக்கொலை.
7.இபாஸ் முறைக்கு எதிராக நீலகிரி மாவட்டத்தில் 24 மணி நேர கடையடைப்பு- உணவு, குடிநீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி.
8.எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணை குறித்த சர்ச்சை காட்சிகளை நீக்கக்கோரி தேனி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
9.இணையவழி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரிப்பதாக வேதனை- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற அன்புமணி வலியுறுத்தல்.
10.கோடை விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 206 சிறப்பு வானூர்திகள் இயக்கம்.