அண்மைச்செய்திகள்
1.செந்தில் பாலாஜி வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருப்பதால் அவர் அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமா என உச்சநீதிமன்றம் கேள்வி.
2.இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது - தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
3.தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான நடுவண் அரசின் சட்டம் செல்லுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் வரும் 19ஆம் தேதி விசாரணை.
4.தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
5.இரட்டைஇலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி- உயர்நீதிமன்ற ஆணையால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு.
6.திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சௌமியா அன்புமணி கடிதம்.
7.தேமுதிக சார்பில் மாநிலங்களவைக்கு செல்வது யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாக பிரேமலதா தகவல்.
8.பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கூகுள் நிறுவன தலைமை செயல் இயக்குநர் சுந்தர் பிச்சை சந்திப்பு.
9.எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமானவரி சட்ட முன்வரைவை நாடாளு மன்றத்தில் நாளை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
10.அமெரிக்காவில் சட்டவிரோமாக குடியேறியவர்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் டிரம்பின் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு.