அண்மைச்செய்திகள்
1.மும்மொழிக் கொள்கையை தவறாக எடுத்துரைத்து தமிழ்நாட்டில் சிலர் அரசியல் செய்வதாக நடுவண் அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு.
2.மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த நகரம் என்பதாலேயே 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லியில் கடுமையாக உணரப்பட்டதாக வல்லுநர்கள் விளக்கம்.
3.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் ஊழலை தடுக்க நட வடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
4.தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் - வானிலை ஆய்வு நடுவம் எச்சரிக்கை.
5.சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு.
6.மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 25ஆம் தேதி தமிழகம் வருகிறார் நடுவண் அமைச்சர் அமித் ஷா.
7.ராணிப்பேட்டை மாவட்டம் நந்தியாலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சல்லி கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
8.தாராபுரம் அருகே 25ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆட்டை இருசக்கர ஊர்தியில் திருடிச் சென்ற கணவன் - மனைவிக்கு காவல்துறை வலைவீச்சு.
9.திருப்பூர் மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் அரசுப்பேருந்து மோதி தண்ட பாணி என்ற தச்சுத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு.
10.தென்காசி அருகே 16 கோடி ரூபாய் வரி கட்டுமு£று அறநிலையத்துறை அறிவிக்கை அனுப்பியதற்கு எதிர்ப்பு- வீடுகளில் கருப்பு கொடி கட்டிய மக்கள்.