அண்மைச்செய்திகள்
1.வணிக வரி மற்றும் பதிவுத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் -பதிவாளர் அலுவலகங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
2.தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்.
3.தன்னைப் பற்றி பேசுவதை ஆர்.பி.உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை.
4.உடல்நலக்குறைவு காரணமாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
5.முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற முன்னாள் ராணுவ வீரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
6.கோடைக்கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு அனுமதி.
7.அரியலூர் மாவட்டம் கீழஎசனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு.
8.கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காததை கண்டித்து விருத்தாச் சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் போராட்டம்.
9.பண்ருட்டி அருகே விவசாய பணிக்கு சென்ற பெண்களை துரத்தி கடித்த கதண்டுகள் - 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
10.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்.