செயல் நெறிகள் முகப்பு > செய்திகள் > செயல் நெறிகள்  
 
 
தமிழகத்திற்கு முன்னுரிமை

செய்திகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். தமிழக செய்திகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பதை எமது செய்திக் கொள்கைகளில் ஒன்றாக பின்பற்றி வருகிறோம்.

தமிழுக்கு முன்னுரிமை

செய்திகளில் பெருமளவு தமிழ் சொற்களையே பயன்படுத்துகின்றோம் அனைத்துத் தரப்பினருக்கும் புரியும் வகையில் அந்த சொற்கள் அமைவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம். மக்கள் செய்திகளில் அறிமுகப்படுத்தி மக்களிடையே சென்றடைந்த தூய சொற்கள் ஏராளம் .

சமூக பொறுப்புணர்வு

கோர விபத்துக் காட்சிகள், உயிர்ச்சேதக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் முதலியவற்றை காண்பிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை தொலைவுக் காட்சிகளாக மட்டுமே காண்பிக்கிறோம். பார்வையாளர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்விதத்திலும் எமது காட்சிகள் பாதித்துவிடக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறை கொண்டு செயல்படுகிறோம்.

நம்பகத்தன்மை

தனி மனித விரோதப்போக்கினை ஊக்கப்படுத்தும் செய்திகளை ஒருபோதும் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புவதில்லை. செய்திகளில் எங்கள் நடுநிலைக்கும், அரசியல் சார்பற்ற நிலைக்கும் கிடைத்திருக்கும் மக்களின் அங்கீகாரம், எங்களை பெருமிதப்படுத்தும் இன்னுமொரு சிறப்பம்சம்.

மொழி உச்சரிப்புப் பயிற்சி

நல்ல தமிழில் பிழையில்லா உச்சரிப்புடன் எமது செய்தி வாசிப்பாளர்கள் செய்திகளை வாசிக்க அவர்களுக்கு போதிய இடைவெளியில் மொழிப்பயிற்சி தரப்படுகிறது. புகழ் பெற்ற தமிழறிஞர்கள் எமது செய்தி வாசிப்பாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கின்றனர்.

 
முகப்பு | நேரலை | நிறுவனம் | நிகழ்ச்சிகள் | செய்திகள் | விநியோகம் | விளம்பரம் | வாய்ப்புகள் | தொடர்புக்கு | Privacy Policy