அண்மைச்செய்திகள்
1.வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு - உள்ளூர் பகையால் இருவர் குடிநீரில் மலம் கலந்ததாக விளக்கம்.
2.பஞ்சாப்பில் நடைபெற்ற போட்டியின்போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அன்புமணி கண்டனம்.
3.நாடு முழுவதும் குடியரசு நாளையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - தமிழகம் முழுவதும் தொடர்வண்டி நிலையங்களில் காவல்துறையினர் ஆய்வு.
4.வக்ஃப் வாரிய சட்டம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளி - ஆ.ராசா உள்ளிட்ட10 எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம்.
5.இணையவழி சூதாட்டத்தால் நிகழ்வும் தற்கொலைகளை தமிழக அரசு எப்போது தடுத்து நிறுத்தும் என மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
6.மருத்துவ மாணவி வழக்கில் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடுவண் புலனாய்வுத்துறை மேல்முறையீடு.
7.நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக கடலூர் மாவட்டத் தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நடுவண் குழுவினர் ஆய்வு.
8.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இரவு நேரங்களில் ஊருக்குள் கரடி நடமாடும் காணொலி வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சம்.
9.பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கோரி ஊர்வலமாக சென்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை.
10.குமரி மாவட்டம் மணக்காவிளையில் ரப்பர் தாள் உலர் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.