அண்மைச்செய்திகள்
1.மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயித்தை கடக்கும் என அச்சம்.
2.சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர், பூண்டி நீர்தேக்கம் வந்ததால் புழல் ஏரிக்கு 350 கனஅடி நீர் திறப்பு.
3.சட்டம் இயற்றி 20 ஆண்டுகளாகியும் பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயபாடமாக்கப்படாததற்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
4.கொள்கலன் சரக்குந்து உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம் - சமையல் எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து.
5.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.
6.டெல்லியில் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியது குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு.
7.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயவிப்புத்துறை வீரர்களுக்கு 5 மாதங்களாகி யும் பயிற்சி அளிக்காதது ஏன்- தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி.
8.வங்கிகள் மூலம் பொதுமக்களை நடுவண் பாஜக அரசு மிரட்டி பணம் பறிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.
9.தேனி அருகே காவலர் முத்துகுமார் கொலை வழக்கில் தேடப்பட்ட பொன் வண்ணன் என்பவர் தப்ப முயன்றபோது காவல்துறையால் சுட்டுக்கொலை.
10.உலக தண்ணீர் நாளையொட்டி தமிழகத்தில் இன்று கிராம சபை கூட்டம்- நீர்நிலைகளை பாதுகாக்கக்கோரி பாமக சார்பில் மனு.