அண்மைச்செய்திகள்
1.இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காததை கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்.
2.ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு நடுவண் அரசு தடை விதித்திருப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு.
3.அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூலம் கிடைக்கும் வரு வாயை, கோவில்களுக்கே செலவு செய்வதாக தமிழக அரசு விளக்கம்.
4.டொனால்ட் டிரம்ப் கூறியபடி அமெரிக்காவின் மாகாணமாக கனடா ஒருபோதும் இருக்காது என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னே சூளுரை.
5.அரசுப் பேருந்துகளில் மகளிர் தன்னுதவிக்குழுவினர் 25 கிலோ பொருட்களை கட்டணமின்றி கொண்டு செல்ல போக்குவரத்து துறை அனுமதி.
6.மாசி பிரதோஷத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் - மலையேறி சென்று சுந்தர மகாலிங்கரை கண்டு வழிபாடு.
7.பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதை உறுதி செய்ய தமிழக அரசே தனி காப்பீட்டு நிறுவனம் தொடங்கி நடத்த மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
8.சென்னை வில்லிவாக்கம், பெரம்பூர், மாதவரம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. 9.கோவில்பட்டியில் கஞ்சா போதையில் மூடுந்தின் கண்ணாடியை உடைத்து, உரிமையாளரை அரிவாளால் வெட்டிய கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு.
10.திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.