அண்மைச்செய்திகள்
1.நாடாளுமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடர் தொடக்கம்- இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை.
2.அனைத்து மக்களுக்குமான திட்டங்கள் நடுவண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என பிரதமர் மோடி உறுதி. 3.தொடக்ககல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைளை கூட நிறைவேற்ற திமுக அரசுக்கு மனமில்லை என மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
4.வடசென்னையில் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு- குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்.
5.செய்யாறு அருகே பனைமரங்களில் இருந்து கள் இறக்குவதை தடுத்த காவல்துறையினருடன் தொழிலாளர்கள் வாக்குவாதம்.
6.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அழிந்துவரும் நிலையில் உள்ள ஈட்டி மரங்களை வெட்டி கடத்திய சத்தியசீலன் என்ற திமுக நிர்வாகி கைது. 7.தங்கம் விலையில் பவுனுக்கு 960 ரூபாய் அதிகரிப்பு - ஒரு பவுன் 62 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
8.திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்.
9.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 62 கோடி ரூபாயை விடுவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
10.67 பேர் பலியான வானூர்தி விபத்திற்கு ஒபாமா மற்றும் பைடனின் தவறான கொள்கைகளே காரணம் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு.