அண்மைச்செய்திகள்
1.அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு.
2.பெஞ்சல் புயல் பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி சிறிதும் போதுமானதல்ல என மருத்துவர் ராமதாஸ் சாடல்.
3.கனமழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்- உதகை மலைத்தொடர்வண்டி சேவை 2 நாட்களுக்கு பிறகு தொடக்கம்.
4.பெஞ்சல் புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியை நடுவண் அரசு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.
5.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்.
6.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் கம்பிவட மகிழுந்து சேவையை தொடங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டம்.
7.ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கியதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்.
8.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரத்து 240 கனஅடியாக அதிகரிப்பு.
9.சூரிய ஒளிவட்ட ஆய்வுக்கான 2 செயற்கை கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 59 ஏவுர்தி.
10.தாய்லாந்தில் கடற்கரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்த ரஷ்ய நடிகை கமிலா பெலியட்ஸ்கயா, ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.