அண்மைச்செய்திகள்
1.பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சர்ச்சை சாமியார் நித்தியானந்தா,ஈக்வடார் நாட்டில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.
2.2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 விழுக்காடு வரை இருக்கும் என ஆய்வறிக்கையில் தகவல்.
3.இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பேச்சு.
4.தொடக்ககல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைளை கூட நிறைவேற்ற திமுக அரசுக்கு மனமில்லை என மருத்துவர் ராமதாஸ் கண்டனம்.
5.வட சென்னை ஓராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும் என திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
6.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை மிரட்டிய வழக்கில் 4 பேர் கைது - 2 மகிழுந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தகவல்.
7.மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை.
8.பாலாற்றில் கழிவுநீர் கலப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்.
9.67 பேர் பலியான வானூர்தி விபத்திற்கு ஒபாமா மற்றும் பைடனின் தவறான கொள்கைகளே காரணம் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு.
10.மலேசியாவில் பெய்த கனமழை காரணமாக வௌ¢ளப்பெருக்கு- 23 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.