Welcome to Makkal TV

அண்மைச்செய்திகள்

1.திருவண்ணாமலையில் பாறை சரிந்து விழுந்து 7 பேர் பலியான மலை அடிவாரப் பகுதியில் ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு.

2.கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அருகே மழை பாதிப்புகளை அதிகாரிகள் பார்வையிடவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டம்.

3.ஏற்காடு பகுதியில் பெய்த கனமழையால் சரபங்கா ஆற்றில் வௌ¢ளப்பெருக் கு- எடப்பாடி அருகே ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.

4.திருப்பத்தூர் மாவட்டம் காடவள்ளி ஏரியில் இருந்து உபரிநீரால் சாலை சேதம் - பாலம் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

5.ஜிஎஸ்டி வரியை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை உள்ளிட்ட இடங்களில் எல்ஐசி நிறுவன முகவர்கள் போராட்டம்.

6.சாத்தனூர் அணையில் 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் என கூறிவிட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்தது ஏன் - அன்புமணி கேள்வி.

7.பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு.

8.மகராஷ்டிரா காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

9.நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தகவல்.

10.திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிடுவதற்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.