உலகில் எத்தனையோ கலைகள் இருந்தாலும் நாட்டிய கலைக்கென்று ஒரு தனி இடம் உண்டு….அதிலும் பரதநாட்டியக் கலை என்றும் சிறப்பு மிகுந்தது…தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இந்த நாட்டியத்திற்கு ரசிகர்கள் ஏராளம்…இப்படி உலகளவில் புகழ் பெற்ற நம் தொன்மை வாய்ந்த பரதநாட்டியத்தை குழந்தைகள் ஆட பார்ப்பது என்பது ஒரு வரமே…!!பரதத்தை மையமாக வைத்தே இந்நிகழ்ச்சியானது அமைக்கப்பட்டுள்ளது. பக்தியை மையப்படுத்திய நடனம், தமிழ் இலக்கியங்களை பிரதிபலிக்கும் நாட்டியம், புகழ் பெற்ற தமிழ் கவிஞர்களின் பாடல்களை நாட்டிய வடிவில் அரங்கேற்றம் என மூன்று அருமையான பகுதிகள் அனைத்துமே பரத நாட்டியத்தின் வழியே புதுமையாக அரங்கேற்றி வருகிறோம்…ஆடல் அரசி ஞாயிறு தோறும் காலை 9.02க்கு ஒளிபரப்பாகிறது.