Welcome to Makkal TV

தமிழகத்தின் நாட்டுப்புற கதையாடல்கள் பல்வேறு கலை வடிவங்களாக இப்பொழுதும் திகழ்கின்றன. ஊர் திருவிழாக்கள், பண்டிகைகள், சிறு தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் என்று வட்டாரம் சார்ந்த விழாக்கள் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய விழாக்களின் போது அந்தந்த வட்டாரம் சார்ந்த நாயகர்களின் வாழ்க்கை வரலாறு விடிய விடிய நடத்தப்படுகின்றது. நல்லதங்காள், அரிச்சந்திரன், முத்துப்பட்டன், பொன்னர் சங்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து, கணியான் கூத்து, வில்லுப்பாட்டு, என்ற பல்வேறுவடிவங்களாக காட்சிப் படுத்தப்பட்டு முதன் முறையாக தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு முதல் அதிகாலை வரை ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *