காலம் கண் போன்றது, நேரம் பொன் போன்றது என்பதை பெண்களுக்கு உணர்த்தி, அவர்கள் பயன்பெரும் வகையில் நல்ல பல விஷயங்களை நிகழ்ச்சியின் வாயிலாக புகுத்தி, இத்தரணிதனில் பெண்கள் தனிச்சிறப்போடு வாழ வழிகாட்டிடும் “பெண்ணே உனக்காக”. திங்கள் முதல் வெள்ளி வரை நாள் தோறும் இரவு 7.30 மணிக்கு…
பெண்களுக்கு தேவையான வழிகாட்டியாக செயல்பட்டு வரும் இந்நிகழ்ச்சியானது பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இறை வழிபாடு, ஆரோக்கியமான உணவு உண்ணும் முறை, ஆடைகள் மற்றும் அலங்காரம் என உங்கள் வீட்டு வரவேற்பறையினை நாங்கள் தேடி வருகிறோம். உணவியல் வல்லுநர் மதுரம் சேகர், உளவியல் மருத்துவர் ஷாலினி, கர்நாடக இசை பாடகி பாம்பே சாரதா உட்பட பல துறை சார்ந்த வல்லுனர்கள் பெண்களுக்கு தேவையான அனைத்தையும் இந்நிகழ்ச்சியின் வழியே வழங்கி வருகின்றனர்….