ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணம். ஆகவே எல்லோரும் ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டார் என்பார்கள். ஆசைப்பட வேண்டும். ஆசையே வெற்றிக்கு அடிப்படை. இதுதான் யதார்த்தம். பேராசை தான் பெரிய நஷ்டம். சின்னச் சின்ன ஆசை எப்போதுமே சிறந்தது. மழையில் சில்லென்று நனைய விரும்புவதும்… கடலிலே நீச்சலடிக்க விரும்புவதும் கூட சின்னச் சின்ன ஆசை தான்.
எல்லோருக்கும் ஆசை இருக்கும். இருப்பவனுக்கு ஒரு ஆசை. இல்லாதவனுக்கு ஒரு ஆசை. ஏழைக் குழந்தைகளுக்கு என்ன ஆசை? அவர்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் நிகழ்ச்சி தான் “ சின்னச் சின்ன ஆசை. புதுச் சொக்கா, ஐஸ்கிரீம், சைக்கிள், செருப்பு, பொம்மை இப்படி அந்த ஏழைக் குழந்தைகளின் தேவைகள். உலகமே சிறியது தான். சின்னச் சின்ன ஆசை ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு.