தமிழர்கள் மறந்து போன உணவுப்பழக்கவழக்கங்களை மீண்டும் உருவாக்கம் செய்யும் சமையல் நிகழ்ச்சி. நமது தொன்மையான உணவுகளின் சிறப்புகளை சங்க இலக்கிய சான்றாவணங்களின் வாயிலாக அறியப்பெற்று அவற்றை நேயர்களுக்கு சமைத்துக்காட்டும் சமையல் நிகழ்ச்சி உணவே மருந்து என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி உணர்த்துவது சிறப்பு.
திங்கள் பகல் 3:02 மணிக்கு… அவசரசமையல்…
உணவு உட்கொள்ளும் வழக்கத்தைக்கூட ஒத்திவைக்கும் மனநிலைக்கு மனிதர்கள் தள்ளப்படும் வாழ்க்கை முறை வேகமடைந்துவருகிறது. உடலையும் உள்ளத்தையும் துவண்டுவிடாமல் தடுக்க நமக்கு கிடைக்கும் சில மணித்துளிகளில் என்ன சமைக்கலாம் என்று நேயர்களுக்கு எடுத்துக் கூறுகிறது அவசரசமையல்
செவ்வாய் பகல் 3:02 மணிக்கு… பாரம்பரிய சமையல்…
பச்சைக்காய்கறிகள், கீரைவகைகள், குளிர் சாறு என்று உடல் மற்றும் மனநலங்களை பாதுகாக்கும் இயற்கை உணவு வகைகளை வரிசைப் படுத்தும் நிகழ்ச்சி. உடல் நலத்திற்கு தேவையான வேகவைக்காத இயற்கை உணவுகளை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்த படுகிறது.
புதன் பகல் 3:02 மணிக்கு… சுவை பயணம்…
தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று அந்தந்தப்பகுதிகளின் சிறப்பான உணவுவகைகளை இந்த பயண நிகழ்ச்சி மையப்படுத்துகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் பிரபலமான உணவகங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அவை எப்படி தயாராகின்றன என்பதை சமையல் நிபுணர்கள் மூலம் செய்து காட்டப் படுகிறது.
வியாழன் பகல் 3:02 மணிக்கு… பன்னாட்டு சமையல்…
அக்கம்பக்கத்து அடுப்பங்கரைகளை பார்த்து பழக்கப்பட்ட நேயர்களுக்கு அயல்நாட்டு அடுப்பங்கரைகளையும் அறிமுகப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய உணவு வகைகள் இந்நிகழ்ச்சியின் மூலம் பரிமாறப்படுகின்றன.
வெள்ளிக் கிழமை பகல் 3:02 மணிக்கு… இனிப்பு! காரம்! …
சுவைகளில் இருவகையான இனிப்பு மற்றும் காரம் செய்துகாட்டி சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பல்சுவை இந்த இனிப்பு காரம்….
சனி பகல் 3:02 மணிக்கு… சத்தான சமையல்…
குறைவான உணவு உண்டாலும் அது சத்தான உணவாக இருக்கவேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் உணவு மற்றும் உடல் நலத்தை பேணும் உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பார்வையாளர்கள் தங்கள் உடல்நிலைக்கு தகுந்தவாறு சத்தான உணவுகளை சமைக்கவும் தேர்வுசெய்யவும் கற்றுக்கொள்கின்றனர்.
ஞாயிறு பகல் 3:02 மணிக்கு… நம்நாட்டு சமையல்…
இந்திய மாநில உணவு வகைகளை சமைத்துகாட்டி அந்த மாநிலத்தின் பெருமை பேசும் நிகழ்ச்சி