மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் உங்களுது ஒவ்வொரு நாளினையும் சிறப்புடன் தொடங்க அன்றைய பொழுதினை சுவையாக்க காலை வணக்கம் ஒளிபரப்பாகிறது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய அருள் திரு.வள்ளலாரின் வைர வரிகளை பாடலாக பாடி, அர்த்தங்களை அழகாக எடுத்து கூறுகிறார்.பாரதி திருமகன்,நாளொரு நற்சிந்தனை என்ற பகுதியில். நமது ஊர்கள் குறித்தும் அதனது உண்மையான பெயர் காரணம் பற்றிய வரலாற்றினையும் இலக்கியங்களை ஆதாரமாக்கி எடுத்து கூறி அது குறித்து பாடல்களையும் பாடி விளக்குகிறார் புலவர் இறைகுரவனார், ஊரும் பேரும் என்ற பகுதியில். காலை வணக்கம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 07.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.