இதுவரை கேட்டிராத விசித்திர தகவல்களையும், வெளிச்சத்திற்கு வராத வினோத நிகழ்வுகளையும் வித்தியாசமான கோணத்தில் வழங்கிவருகிறது மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மை நிகழ்ச்சி.
வீட்டுக்குள் கல்லறைகட்டி வாழும் மனிதர்கள், கணவன் கட்டியதாலியை கோயில் உண்டியலில் காணிக்கையாகும் பெண்கள், நாள் தவறாமல் சாமியார்களுக்கு உணவளித்தபிறகே சாப்பிடும் கிராமமக்கள் , எண்னைப்பலகாரத்த கண்டு பீதியடையும் கிராமத்தினர் என ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பை கூட்டிகொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி.
மக்களின் எண்ணங்களோடு இரண்டுற கலந்துவிட்ட இந்த நம்பமுடியாத நம்பிக்கைகளை சுவைபடகூரும் உண்மை நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை இரவு 8:30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.