சமூகத்தில் கடின உழைப்பில், அடித்தளமிட்டு உழைப்பிலும் வாழ்விலும் வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் அனுபவத்தையும் கடின உழைப்பின் இரகசியங்களையும் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் உரு பெற்றிருக்கும் நிகழ்ச்சியே அழகிய தமிழ் மகன்/மகள்.ஏராளமான துறை சார்ந்த பிரபலங்கள், வாரந்தோறும் இந்நிகழ்ச்சியின் வழியே தங்களது வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். வரவேற்பும், உபசரிப்பும், தமிழின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் அமைத்து நிகழ்ச்சியே துவக்கம் பெறுகிறது. மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு பகல் 11.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.