இளம் தலைமுறையினரின் இசை கனவுகளை ஈடேற்றிவைக்கும் ஓர் இனிய நிகழ்வாக..
இதுவரை உங்கள் இல்லங்களில் மட்டுமே ஒலித்துகொண்டிருந்த உங்களது இசை தொகுப்புகளை உலகத் தமிழர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஒலிக்கச் செய்யும் பொறுப்பை மக்கள் தொலைக்காட்சி எடுத்துக்கொண்டுள்ளது.
ஒலி வடிவிலான உங்கள் பாடல்களுக்கு ஒளியோவியம் தீட்டி அழகு பார்க்கவேண்டுமா?
உங்கள் படைப்புகள் உலக தமிழ் மக்களின் உள்ளங்களை உரச வேண்டுமா?
கண்களையும் காதுகளையும் கவர வேண்டுமா?
கேட்போரை மெய்மறக்கச் செய்யும் மெல்லிசையோ! களைப்பு நீக்கி களிப்பூட்டும் துல்லிசையோ!
அவற்றை எங்களிடம் அனுப்பிவையுங்கள்...
உங்களுக்குள் இருக்கும் கலையார்வத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறோம்...
கூடுதல் விபரங்களுக்கு : prgm@makkal.tv அல்லது +91 44 28260033 தொடர்புக்கொள்ளவும்...
|